டெல்லி அரசு உத்தரவு மது குடிக்க வயது 21 ஆக குறைப்பு

புதுடெல்லி: மது வாங்குவதற்கான சட்டப்பூர்வமான வயதை 25-லிருந்து 21 ஆக குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ‘‘அமைச்சரவை முடிவின்படி மது வாங்குவதற்கான வயது வரம்பு 25-லிருந்து 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த மதுக்கடைகளையும் அரசு திறக்காது. எந்த கடைகளையும் நடத்தாது. தற்சமயம் 60 சதவிகித மதுக்கடைகள் மட்டுமே அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. மதுபான வியாபாரத்தில் மாபியாக்கள் தலையிடாமல் தடுக்கும் வகையில் அனைத்து மதுக்கடைகளுக்கும் சரிசமமாக மது விநியோகம் நடைபெறுகிறது. இந்த புதிய கொள்கை முடிவுகளின்படி 20 சதவிகித வருவாய் அரசுக்கு அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு