டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் மிதமான அறிகுறிகளுடன் இருப்பதாக அதிகாரிகள் தகவல்

டெல்லி: டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 6 பேருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டுப்பயணிகள் வந்திறங்குவதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் டெல்லியில் உள்ள  எல்என்ஜேபி-யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு பேரும் நிலையாக இருப்பதாகவும், லேசான முதல் மிதமான அறிகுறிகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், ராஜஸ்தானில்  9 பேருக்கும்,, கர்நாடகாவில் 3பேருக்கும், கேரளா , ஆந்திரா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம்  1 ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபரின் முதல் மரணத்தை ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உறுதிப்படுத்தினார். நேற்று துபாய்-லிந்து மகாராஷ்டிரா வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. …

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு