டெல்லியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கிய 9 நெல், தானியங்களின் சிறப்பு அம்சம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி ெஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது, தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். ஓடி ஓயாது உழைக்கும் விளிம்பு நிலை மனிதனின் வயிற்று பசியையும், மரத்தின் விளிம்பில் நின்று கொண்டு காடு வளர்க்கும் பணி செய்யும் பறவையின் பசியையும் ஆற்றிய நிலம், 100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளாலும், பல வகை சிறுதானியங்களாலும் நிறைந்தது தமிழ் நிலம்.இந்நிலத்தின் முக்கிய மரபு தானியங்கள் மற்றும் அதன் சிறப்பு அம்சம்:*  மாப்பிள்ளை சம்பா – சிகப்பு நிறத்தால் ஆண்ட்டி ஆக்சிடன்ட் தன்மையை கொடுத்து நோயின்றி காக்கும் அரிசி.* குள்ளக்கார் – பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசி.* கருப்புக்கவுனி – நெடுங்காலம் அரசர்களுக்கு மட்டும் பயிரிடப்பட்ட ஆந்தோசயனைன் நிறைந்த புற்றை தடுக்கும் கருப்பு அரிசி.* சீரக சம்பா – பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசி.* குடவாழை – தோலுக்கு பொலிவு அளிக்கும் மரபு சிகப்பு அரிசி இது. அருந்தானியங்கள்:* கம்பு – அருந்தானியங்களின் அரசன் இவன். அரிசியைவிட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்ட சர்க்கரை நோயாளிக்கான லோ கிளைசிமிக் அரிசி.* வரகு – தமிழ் மூதாட்டி அவ்வை விரும்பி கேட்டு உண்ட மெல்ல சர்க்கரை தரும் மரபு தானியம்.* சாமை – பழங்குடி மக்கள் பயிராக்கி படைத்திடும் மருத்துவ குணமிக்க சிறுதானியம்.* தினை – கண்ணுக்கும் குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியம்.* கேழ்வரகு – இரும்பும் கால்சியமும் நிறைந்த, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை