டெல்லியில் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: டெல்லியில் பனிமூட்டம் காரணமாக பெரும்பாலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடுமையான குளிர், அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி நோக்கி வரும் ரயில்கள் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்படுகிறது. சூப்பர் பாஸ்ட், பிரிமீயம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.தலைநகர் டெல்லியில்  கடுமையான பனிமூட்டம், குளிர் நிலவி வருகிறது. அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கடும் பனிமூட்டம், குளிர் காரணமாக டெல்லியில் டெல்லி நோக்கி வரும் ரயில்கள் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.சூப்பர் பாஸ்ட் மற்றும் பிரிமீயம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்