டெல்லியில் திருட்டுபோன செல்போனை தேடி குடியாத்தம் வந்த கல்லூரி மாணவர்கள் போலீசார் விசாரணை தனி சாப்ட்வேர் மூலம் கண்டறிந்து

குடியாத்தம், டிச.28: டெல்லியில் திருட்டு போன விலை உயர்ந்த செல்போனை தனி சாப்ட்வேர் மூலம் தேடிக்கொண்டு குடியாத்தம் நகருக்கு வந்த வாலிபர்கள், பின்னர் போலீசில் புகார் அளித்தனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 5 மாணவர்கள், டெல்லியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை 3ம் ஆண்டு படித்து வருகின்றனர். இதற்காக டெல்லியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில், இந்த மாணவர்களது விலை உயர்ந்த ஆப்பிள் போன் கடந்த மாதம் திருட்டு போனது. இதுகுறித்து டெல்லி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், தனி சாப்ட்வேர் மூலம் தங்களது செல்போன் தற்போது எங்கு உள்ளது என்பது குறித்து மாணவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவற்றில் ஒருவரது செல்போன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது செல்போனை தேடிக்கொண்டு குடியாத்தம் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து, நேற்று குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்