டெல்லியில் கொடூரம்: 17 வயது மாணவி மீது அமிலம் வீச்சு.. ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் கைது..!

டெல்லி: டெல்லியில் சாலையில் நடந்து சென்ற 17 வயது மாணவி மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிட் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒருவர் பிடிப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்கு டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் காலை 7 மணியளவில் சகோதரியுடன் சென்ற 17 வயது மாணவியே ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர். இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசியதால் மாணவி முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடந்து அந்த மாணவி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  மாணவி மீது ஆசிட் வீசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆசிட் தாக்குதலுக்கு ஆளான மாணவி மயக்கமடைந்து அபாயகட்டத்தில் இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இருசக்கர வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் பிடிப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி தப்பிய நபரை பிடிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே அபாயகரமான அமிலத்தை கடையில் விற்க தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 17 வயது மாணவி மீதான தாக்குதல் குறித்து காவல்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. …

Related posts

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்