டெல்லியில் கட்சி அலுவலகம் திறந்தார் தெலங்கானா முதல்வர்

புதுடெல்லி: தேசிய அரசியலில் பங்கேற்கும் நோக்கத்துடன் டெல்லியில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் அலுவலகத்தை தெலங்கானா முதல்வரும் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை கே சந்திரசேகர் ராவ் தொடங்கினார். 2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக பொறுப்பேற்றார். கட்சி தொடங்கி 21 ஆண்டுகளுக்கு பின் தெலங்கானா ராஷ்ட்டிரா சமிதியானது அண்மையில் பாரத் ராஷ்டிர சமிதியாக பெயர் மாற்றப்பட்டது.  தேசிய அரசியலில் பங்கேற்பதை கருத்தில் கொண்டு டெல்லியில் பிஆர்எஸ் கட்சி அலுவலகத்தை  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் நேற்று திறந்து வைத்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார்….

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்