டெல்லிக்கு புதிய துணை நிலை ஆளுநர் நியமனம்

புதுடெல்லி: டெல்லிக்கு புதிய துணை நிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்தவர் அனில் பைஜால். இவர், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு  அனுப்பி வைத்தார். பைஜாலின் ராஜினாமாவை தொடர்ந்து டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். அதில், சக்சேனா துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து பதவி அமலுக்கு வரும். சக்சேனா சமீப காலம் வரை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தார். தற்போது அவா் டெல்லி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்….

Related posts

வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா?: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு

புதுச்சேரியில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமிக்கு அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை

தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பை ஆய்வு செய்யக்கோரிய வழக்கு 10ல் விசாரணை