டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பு ஏல அறிவிப்பு; ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: தஞ்சாவூரில் நடந்தது

தஞ்சாவூர், ஏப்.6: டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பு ஏல அறிவிக்கையைக் கண்டித்தும், விவசாயிகளின் டில்லிபேரணிக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர், சிஐடியு அமைப்பினர் ஆகியோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய பாஜக அரசு வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க ஒத்துக் கொண்டு வழங்காதது, தொழிலாளர் நல 44 சட்டங்களை 4 தொகுப்புகளாகச் சுருக்கி தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களைப் பறிப்பது, கிராமப்புற நூறு நாள் வேலை திட்ட நிதிக் குறைப்பு,

காவிரி டெல்டா பகுதியில் மத்திய பாஜக அரசின் நிலக்கரி எடுப்பு ஏல அறிவிக்கை ஆகியவற்றைக் கண்டித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுத்து பாலைவனமாக்க வேண்டாம். நிலக்கரி எடுப்பு ஏல அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற் குழு உறுப்பினர் மனோகரன், மாநகரச் செயலர் வடிவேலன், மாவட்டக் குழு உறுப்பினர் குருசாமி, சிஐடியு நிர்வாகி மூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கம் கருப்பையன், மாதர் சங்க மாவட்டச் செயலர் வசந்தி, துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது