டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய கோரிய வழக்கு: ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: சென்னை ஐகோர்ட்

சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர்கள் வழங்கியதில் முறைகேடுகளை நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.பி வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், தனக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை அளித்ததையும் மீறி அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கனது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இந்த மனு கடந்த முறை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எஸ்.பி வேலுமணி தரப்பில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகியிருந்தார். அவர் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சார்பில் ஆஜராகா கூடிய வழக்கறிஞர் என்பதால் அவர் எவ்வாறு இந்த வழக்கில் ஆஜராகலாம் என தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் இந்த மனு தொடர்பாக கூடுதல் மனுக்களை தாக்கல் செய்யவும் கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். வேலுமணிக்கு எதிராக பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய கோரிய வழக்குகளை தனி நீதிபதி மட்டுமே விசாரிக்க வேண்டும், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க முடியாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபத்தின் மீதான உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு 2 நாட்களுக்கு புறகு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் இந்த வழக்கின் இடைக்கால உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்துள்ளது. டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை