டெண்டர்களுக்கு வைப்பு தொகை வழங்க மின்னணு நடைமுறை மாற்ற கோரிக்கை

 

கோவை, ஜூலை 25: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளுக்கு 1 சதவீத வைப்பு தொகை (இஎம்டி) செலுத்த வேண்டும் என ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வைப்பு தொகை ஒப்பந்த நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கப்படும். டெண்டர் கிடைக்காவிட்டால் டெண்டர் கேட்டு விண்ணப்பித்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு உடனடியாக இந்த வைப்பு தொகை வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் வைப்பு தொகையை காசோலையாக மாநகராட்சி அலுவலகங்களில் செலுத்தி வந்தது.

இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு மின்னணு முறையில் செலுத்த வேண்டும் என்ற தற்போது உத்தரவு வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் மின்னணு முறையில் வைப்பு தொகை செலுத்திய ஒப்பந்த நிறுவனங்களுக்கு வைப்பு தொகை திரும்ப முழையாக வழங்கப்படவில்லை. வைப்பு தொகை கேட்டு ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட அதாவது காசோலையாக மாநகராட்சி அலுவலகங்களில் வைப்பு தொகை செலுத்தும் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

ஆன்லைன் மூலமாக வைப்பு தொகையை செலுத்தினால் அந்த தொகை ஒப்பந்த நிறுவனங்களுக்கு உரிய முறையில் திரும்ப கிடைப்பதில்லை. காசோலையாக செலுத்தினால் அந்த தொகையை திரும்ப பெற முடியும் என ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர். மேலும் கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி