டெங்கு விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, ஜூன் 7: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வியியல் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி, கருமகவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. கேஎஸ்ஆர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபு தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல், சுகாதார விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தியபடி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கருமகவுண்டம்பாளையத்தில், தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டி, மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சுத்தம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், துணை தாளாளர் சச்சின் ஆகியோர் பாராட்டினர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து