டெங்கு கொசுப்புழு உற்பத்தி இரும்பு குடோன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தஞ்சாவூர், செப். 27: தஞ்சாவூரில் பழைய இரும்பு குடோனில் டயர்களில் கொசுப்புழு இருந்தது கண்டறியப்பட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின்படி டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 13வது வார்டு ராயல் சிட்டி நகர் பகுதியில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
இதில் பழைய இரும்பு குடோன்களில் போடப்பட்டிருந்த பழைய டயர்களை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பழைய டயர்களில் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டதால் குடோன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அந்த பகுதிகளில் சுமார் 1 டன் டயர்களை துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான குழுவினர் அப்புறப்படுத்தினர். தஞ்சாவூர் மாநகரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் பழைய டயர்கள், தேவையற்ற கலன்களை அப்புறப்படுத்தாமல் வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி எச்சரிக்கை விடுத்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை