டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திருச்செங்கோடு, ஆக.23: திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகளில் பணிபுரியும் டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளர் சேகர், சுகாதார அதிகாரி வெங்கடாசலம் ஆகியோர் பரப்புரையாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிவுறுத்தினர். மழைக்காலம் நெருங்குவதால் நகராட்சி டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வார்டு பகுதிகளுக்கும் நகராட்சி ஊழியர்களுடன் சென்று அந்தந்த பகுதிகள் சுத்தமாக உள்ளதா எனவும், கொசு மருந்தடித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் நகராட்சி பணிக்கு வரும் பரப்புரையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் புகை மருந்து அடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி