டூவீலரில் மதுபாட்டில் கடத்திய பெண் கைது

 

பாப்பிரெட்டிப்பட்டி, மே 31: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் எஸ்ஐ செல்வம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் காளிப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டூவீலரை, சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சாக்கு பையில் மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

உடனே, வண்டியை ஓட்டி வந்த கோபிநாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசி(40) என்பவரிடம் விசாரித்தபோது, மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். டூவீலர்களுடன் 32 மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு