டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பில் ரூ.18 கோடி மதிப்பிலான 1,600 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: தமிழக அரசிடம் வழங்கப்பட்டது

சென்னை: டி.வி.எஸ் மோட்டார்  நிறுவனம், சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை மூலமாக ரூ.18 கோடி மதிப்பிலான 1600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழக அரசுக்கு அளிக்கும் வகையில், முதல்கட்டமாக ரூ.7 கோடி மதிப்பிலான 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை தலைவர் ஸ்வரன்சிங் மற்றும் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர் சேதுராமன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினர். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட கோவிட்-19 நிவாரண பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார். இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து சுய விருப்பத்தின் பேரில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஓலம் இன்டர்நேஷனல் மற்றும் டிமாசெக் பவுண்டேஷன் என்ற பன்னாட்டு நிறுவனங்கள் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 300 ஆக்சிஜன்  செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், ஓலம் இன்டர்நேஷனல் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சிங்கப்பூர் நாட்டு தூதர் பாங் காக் டியான், முதன்மை செயலர் ஜான் சியோ, சிங்கப்பூர் தூதரகத்தின் துணை தூதர் ஆபிரகாம் டான், ஓலம் இன்டர்நேஷனல் பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் தியாகராஜன் மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்….

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள்