டி.எஸ்.கே.மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தைகள் சார்ந்த விழிப்புணர்வு

 

திருப்பூர், ஜூலை 14: திருப்பூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மாவட்ட மகளிர் அதிகார மையம் சார்பில் பெண் குழந்தைகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 100 நாட்கள் நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த விழிப்புணர்வு,மகப்பேறு உதவித்தொகை, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம்,குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கான புதிய சீர்திருத்த சட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. பெண்களின் உதவி எண்: 181, குழந்தைகளின் உதவி மேலும், 1098 என்ற தொடர்பு எண் குறித்தும், சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி