டி.என்.பாளையம் ஒன்றிய வாக்குச்சாவடி: முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கோபி, ஏப்.7: கோபி அருகே டி.என்.பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் டி.என்.பாளையம் ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றிய திமுக அவைத்தலைவர் கருப்புசாமி தலைமையில் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் நடைபெற்ற கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், கோபி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளரும் மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச்செயலாளருமான சி.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர் நிலை 2 அமைக்கும் பணி குறித்தும், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்த 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டமான ‘உடன் பிறப்புகளாய் இணைவோம்’ குறித்தும், இத்திட்டத்தில் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினர். அதைத்தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது குறித்தும், அதற்காக வாக்கு சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.பி.சண்முகசுந்தரம், வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ்மகன் சிவா, காசிபாளையம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், கோபி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Related posts

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம்

ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில்