டிரெண்டியா இருக்க முடியலயா?!

ஃபிட்டாக இருக்க முடியவில்லை என்பதற்கு எடை அதிகரிப்பு மட்டுமே காரணமல்ல. சிலருக்கு உடலின் ஒரு சில பகுதிகள் மட்டும் பருமனாக உள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு கைகள், இடுப்பு, தொடைப் பகுதிகள் அதிக பருமனாக இருப்பது,; ஆண்களுக்கு இடுப்புப் பகுதியில் பருமன் போன்ற பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகிறது. இது அவர்களுக்கு வயதான தோற்றத்தை அளிப்பதுடன் டிரெண்டில் உள்ள உடைகளை அணியவும் முடிவதில்லை. பர்சனாலிட்டி பிரச்னையாகவும் மாறுகிறது. இதனால் அடுத்தடுத்த உடல்நலப் பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். கை, இடுப்பு, தொடை என குறிப்பிட்ட இடத்தில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து எடை கூடுவதால் உடலின் வடிவமே மாறிப் போகும். இதனால் பெண்கள் ஸ்லீவ்லெஸ், திரீ ஃபோர்த் ஸ்லீவ் அணிய முடியாது, வெஸ்டர்ன் உடைகளை அணிவதும் இயலாமல் போகும். சேலையில் கூட குறிப்பிட்ட வகையானவற்றை மட்டும்தான் இவர்களால் உடுத்த முடியும். ஆண்களும் ஃபிட்டான லேட்டஸ்ட் மாடல் சட்டைகளையே, டிஷர்ட்டுகளையோ அணிய முடியாது. இதுவே லைஃப் ஸ்டைல் பிரச்னையாகவும் மாறுகிறது. இது ஒருவித தாழ்வுமனப்பாண்மையை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்பைச் சந்திக்கிறது.காரணத்தை கண்டறியுங்கள்உடல் மாற்றத்துக்கான காரணத்தை கண்டறிவது அவசியம். உடலில் உள்ள வேறு ஏதாவது உடல் நலப்பிரச்னை கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ‘கம்மியாதான் சாப்பிடுறேன். ஆனாலும், எடைகூடுது’ என்று சொல்பவர்களுக்கு மருத்துவரீதியான பிரச்னை காரணமாக இருக்கக்கூடும்.; தைராய்டு பாதிப்பு, ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்னைகள், மரபு ரீதியான காரணங்கள், தவறான உணவுமுறை, உடல் உழைப்பின்றி இருப்பது இப்படிப் பல காரணங்களால் உடல்பருமன் உண்டாகலாம். உடல் பருமன் வேறு சில உடல் நலப் பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளதால் சரியான காரணத்தைக் கண்டறிவது அவசியம்.மெட்டபாலிசம் சரியாக இல்லாததுஅளவுக்கு அதிகமாக; உட்கொள்ளும் உணவு வகைகளில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் உடலில் தங்கிவிடுவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடலின் எடைக்கு ஏற்ப உடல் உறுப்புக்களின் செயல்பாட்டுக்கு கொழுப்புச் சத்து தேவைப்படுகிறது. உடலில் மெட்டபாலிசம் சரியாக இல்லாத போதும் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்கி உடல் பருமனுக்குக் காரணமாகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் மெட்டபாலிசம் சரியாக இருப்பதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.வாழ்க்கை முறையை மாற்றுங்கள்வாழ்க்கையை மாற்ற வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களது உடலின் தன்மைக்கு ஏற்ற உடல் எடைக்குறைப்புக்கான டயட் திட்டத்தைப் பின்பற்றலாம். சரியான வேளைகளில் போதுமான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அடிக்கடி காபி, டீ; குடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்கவும். நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்கலாம். பழங்கள், காய்கறி மற்றும் கீரை வகைகள், ஆவியில் வேக வைத்த உணவுகளும் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும். தண்ணீர் குடிப்பதும் உங்களது உடலில் இருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், உடல் எடைக் குறைப்புக்கு உதவும். வேலை நேரத்தில் உங்களுக்கு நீங்களே இலக்கு வைத்துத் தண்ணீர் குடிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளவும். உணவில் உப்பை சரியான அளவில் பயன்படுத்துவதும், வைட்டமின் சி சத்துள்ள பழங்களையும் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் கொழுப்பு அதிகரிப்பைக் கட்டுக்குள் வைக்கும். போதிய அளவு தூக்கம் அவசியம். போதிய தூக்கமில்லாமல் போவதும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.; இந்த மாற்றங்களை முறைப்படுத்திய சில மாதங் களில் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். இதன் பின்னரும் உடலில் சில பாகங்கள் மட்டும் பருமனாக இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

Related posts

படிகாரத்தின் மருத்துவ குணங்கள்

கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!

எடையும் குடைமிளகாயும்!