Thursday, June 27, 2024
Home » டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கான நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தொழில்நுட்ப கல்வி இயக்கம்

டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கான நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தொழில்நுட்ப கல்வி இயக்கம்

by kannappan

சென்னை: தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள் :1) விண்ணப்பிக்கும் முறை :  www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.  சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.2) இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் :துவங்கும் நாள் : 24.06.2022        முடிவுறும் நாள் : 23.07.20223) பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.300/-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.  இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions – 2022-23, ACGCET, Karaikudi” payable at Karaikudi” என்ற பெயரில் 24.06.2022 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.4) SC/SCA/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை5) விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) பயன்படுத்திக் கொள்ளலாம்.  அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.6) இந்த கல்வியாண்டில் Second Year B.E./B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்,7) மேலும் விவரங்கள் அறிய www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in ஆகிய இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும்.8) தொடர்பு எண் : 04565-230801, 04565-224528…

You may also like

Leave a Comment

20 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi