டிடிவி.தினகரனை கண்டித்து அமமுகவில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

சென்னை: டிடிவி.தினகரனின் நடவடிக்கைக்கு எதிராக பூந்தமல்லி அமமுக வட்டச்செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் இடையிலான கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் உள்ளது. இதனால், டிடிவி.தினகரன் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் யாரும் சசிகலாவை நேரில் சென்று சந்திக்கக்கூடாது என அறிவுறுத்தி வருகிறார். ஆனால், சில நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், பூந்தமல்லியை சேர்ந்த அமமுக முக்கிய நகர்மன்ற நிர்வாகி ஒருவர் கடந்த வாரம் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த டிடிவி.தினகரன் குறிப்பிட்ட முக்கிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார்.இதேபோல், பூந்தமல்லியை சேர்ந்த சில நிர்வாகிகளையும் டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கினார். இதற்கு விளக்கம் கேட்டு டிடிவி.தினகரனை சம்பந்தபட்ட நிர்வாகிகள் சந்திக்க முயன்றனர். ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில், டிடிவி.தினகரனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி 21வது வார்டு வட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் நேற்று அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்தனர்….

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்