டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்கலாம்

புதுடெல்லி: வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும். அதுபோல், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம். மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஜனாதிபதி மாளிகை முற்றத்தில், ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

பா.ஜ அமைச்சரின் காரை தடுத்ததாக நடிகர் கைது: கோவா போலீசார் அதிரடி

கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்