டிசம்பர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த டிசம்பர் மாதம் வரை குறைந்து வந்தது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் மறுபடியும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது, கடந்த 1ம் தேதி 474 பேருக்கும், 2ம் தேதி 462 பேருக்கும், 4ம் தேதி 477 பேரும் பாதிக்கப்பட்டனர். 5ம் தேதி 543 பேர், 6ம் தேதி 562 பேர், 7ம் தேதி 567 பேர், 8ம் தேதி 555 பேர், 9ம் தேதி 569 பேர், 10ம் தேதி 671 பேர், 11ம் தேதி 685 பேர், 12ம் தேதி 670 பேர், 13ம் தேதி 695 பேர், 14ம் தேதி 759 பேர், 15ம் தேதி 836 பேர், 16ம் தேதி 867 பேர், 17ம் தேதி 945 பேர், 18ம் தேதி 989 பேர் என கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று நேற்று ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1,087 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று சென்னையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று 421 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 73,201 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 56 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,64,450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 610 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 8,45,178 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6,690 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேருமாக 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,582 ஆக உயர்ந்துள்ளது….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்