டான்ஸ் மாஸ்டரின் உதவியாளர் மீது தாக்குதல்: டிரைவர் மீது புகார்

சென்னை: புளியந்தோப்பு கே.பி.பார்க் 6வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன் (36). இவர், பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இவர் வாடகை பைக் மூலம் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பைக்கை, ஆவடியை சேர்ந்த விநாயகம் (26), ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் அருகே இறங்கிய ஜமால் மொய்தீன், கட்டண தொகையில் இருந்து ரூ.20 குறைவாக கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், வாகனத்தை ஓட்டி வந்த விநாயகம், தான் வைத்திருந்த ஹெல்மெட்டை எடுத்து ஜமால் மொய்தீன் மீது வீசியுள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் ேபரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்