டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோ இவி என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் கார். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியாகோ இவி அறிமுகச் சலுகையுடன், துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.8.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 4 வேரியண்ட்கள் உள்ளன. இந்த காருக்கான முன்பதிவு வரும் 10ம் தேதி துவங்குகிறது. முன்பதிவு செய்வோருக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் கார்கள் டெலிவரி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் கிளஸ்டர், உயரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய டிரைவர் சீட், தானியங்கி கிளைமேட் கன்ட்ரோல், தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 45 வகையான இசட் கனெக்ட், ஸ்மார்ட் வாட்சுடன் இணைத்துக் கொள்ளும் வசதி என பல்வேறு அம்சங்கள் உள்ளன.  கார் வேரியண்டுக்கு ஏற்ப 19.2 கிலோவாட் அவர் மற்றும் 24 கிலோவாட் அவர் என 2 பேட்டரிகள் உள்ளன. முழுமையாக சார்ஜ் செய்தால், இவை முறையே 250 கி.மீ மற்றும் 315 கி.மீ தூரம் வரை செல்லும். துவக்க வேரியண்டான எக்ஸ்இ-ல் 19.2 கிலோவாட் அவர் பேட்டரி மற்றும் 3.3 கிலோவாட்  சார்ஜருடன் வருகிறது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.8.49 லட்சம். டாப் வேரியண்டான எக்ஸ்இசட் ப்ளஸ் டெக் லக்ஸ், 24 கிலோவாட் அவர் பேட்டரியுடன் வருகிறது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.11.79 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

Related posts

டுகாட்டி நிறுவனம், மல்டிஸ்டிராடா வி4

பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பிஎம்டபிள்யூ சிஇ 04