ஜோலார்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி-நெல் நடவு பணி தீவிரம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் அதிகரித்து  விவசாய நிலங்களில் குளம் போல் மழை நீர் தேங்கி, விவசாய கிணறுகளும், ஏரிகளும் நிரம்பி வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக மழை பொய்த்து போனதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உரிய காலத்தில் விதைகள் விதைத்து  அறுவடை செய்யும் காலத்திற்கு தேவையான மழை நீர் இல்லாமல் விவசாய நிலங்களில் விதைத்த மகசூலை அறுவடை செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் விவசாயிகள் விவசாயம் செய்வதை தவிர்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பருவ மழை மூலமும், புயல் மூலம் மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் உயர்ந்து ஆங்காங்கே விவசாய கிணறுகளும், ஏரிகளும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 தினங்களாக ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விவசாய கிணறுகளில் நிரம்பி வருகின்றன. இதனால் நெல் விதைத்த விவசாயிகள் நெல் நாற்றுகளை பறித்து நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களில் மழை பற்றாக்குறையால் ஒரு போக நெல் விளைச்சல் எடுத்தவர்கள் தற்போது அடிக்கடி காற்றழுத்த தாழ்வு நிலையால் பெய்து வரும் மழையால் இருபோக விளைச்சலுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மூலம் நெற்பயிர்களை பறித்து நெற்பயிர் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்….

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்