ஜேஇஇ தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்த முன்னெடுப்பு தமிழக அரசுக்கு நன்றி வல்லாத்திராகோட்டை பகுதி பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் புதுக்கோட்டை அரசு கல்லூரிக்கு களப்பயணம்

 

புதுக்கோட்டை, பிப்.4: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருவரங்குளம் வல்லத்திரா கோட்டை வட்டார பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா வழிகாட்டுதலின்படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் களப்பயணம் புதுக்கோட்டை அரசு கருணாநிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.

கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு துறைவாரியாக உயர்கல்வி வழிகாட்டுதல் படி வேதியல் இயற்பியல் ஆய்வகங்களில் சோதனை செய்து காட்டினர். மேலும் கணினி வழி கல்வி பற்றியும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் எடுத்து கூறினார். நான் முதல்வன் திட்ட களப்பயண ஏற்பாடுகளை திருவரங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கமணி, வல்லத்திரா கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்