ஜெயிப்பது கார்கேவா, சசிதரூரா? காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதில் வெற்றி பெறப்போவது மல்லிகார்ஜூனா கார்கேவா அல்லது சசிதரூரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்களிக்க தகுதி பெற்ற 9,915 நிர்வாகிகளில் 9,500 பேர் வாக்களித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. வாக்குகள் எண்ணப்பட்டதும் முடிவும் அறிவிக்கப்படும். இதில் வெற்றி பெறப்போவது கார்கேவா, சசிதரூரா என்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்