ஜெயலலிதாவின் வாரிசு நான் தான்; மீண்டும் ஒரு வழக்கு

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் என்பதால் அவர்களின் சொத்துக்களில் பாதி தனக்கு சேரவேண்டும் என கர்நாடகவைசேந்த முதியவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடக மாநிலத்தை செந்த வாசுதேவன் என்ற 83 வயது முதியவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளார். அதில் தன்னுடைய பெற்றோ R. ஜெயராம், J. ஜெயம்மாள் என்றும் தனது அப்பா வேதவள்ளியை 2ம் தாரம் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்களுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் வாரிசுகள் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் தனக்கு சகோதரர், சகோதிரி என்றும் தெரிவித்துள்ளார். 1950ம் ஆண்டுகளில் தமது தந்தையிடம் தமது தயார் ஜெயம்மா மைசூர் கோர்ட்டில் ஜீவநாசம் கேட்டு வழக்கு தொடர்ந்தார் என்றும் சமரசத்தில் முடிந்தது அந்த வழக்கில் ஜெயலலிதாவின் தயார் வேதவள்ளி மற்றும் ஜெயக்குமார்,  ஜெயலலிதாவை எதிர் மனுதாரர்கள் ஆக சேர்ததுதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சகோதரர் ஜெயக்குமார் இறந்து விட்டதால் தான் மட்டுமே தற்பொழுது ஜெயலலிதாவின் வாரிசு என்றும் எனவே அவரது சொத்துக்களில் பாதி தனக்கு சேரவேண்டும் எனவும் வாசுதேவன் தெரிவித்துள்ளார். சட்டப்படியான வாரிசுகள் J. தீபா J. தீபக் என்று ஏற்கனவே உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு