ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டம்

 

ஜெயங்கொண்டம், செப்.28: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலக கூட்டரங்கில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார். . முன்னதாக நகராட்சி ஆணையர் அசோக்குமார் வரவேற்று பேசினார். நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி மேலாளர் அன்புசெல்வி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ் , ரங்கநாதன், கிருபாநிதி, பாண்டியன், துர்காஆனந்த், , மீனாட்சி நடராஜன் மற்றும் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் ஜின்னா, நகர அமைப்பு ஆய்வாளர் கணேசரங்கன் நகராட்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தார் சாலை, சிமெண்ட் சாலை, தெருவிளக்கு, 4 ரோடு பகுதியில் பொதுக்கழிப்பறை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர். கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டபடி அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார.கூட்டம் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்