ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

ஜெயங்கொண்டம், ஆக. 3: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை க.சொ.க.கண்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II 2023 – 2024 திட்டத்தின் கீழ், ஆமணக்கந்தோண்டி ஊராட்சியில் ரூ.36.34 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள், மேலணிக்குழி ஊராட்சியில் ரூ.41.92 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உட்கோட்டை ஆதிதிராவிடர் காலனியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, காட்டகரம் ஊராட்சி, குட்டகரை அம்மன் கோயில் தெருவில் ரூ.6.74 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை க.சொ.க.கண்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் (வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், வேளாண்மை அட்மா குழு தலைவருமான மணிமாறன், ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், பிரிதிவிராஜன், ரேவதி சௌந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், இளநிலை பொறியாளர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தமிழ்செல்வி நடராஜன் (ஆமணக்கந்தோண்டி), செல்லதுரை (காட்டகரம்), திமுக பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்