ஜெகன்னா பொன்விழா கொண்டாட்டம் 2வது நாளில் கலைஞர்களுடன் நடனமாடிய அமைச்சர் ரோஜா

*ஆர்வமுடன் ரசித்த பொதுமக்கள்திருப்பதி :  திருப்பதியில் ஜெகன்னா பொன்விழா கொண்டாட்டத்தின் 2வது நாளில் நடன கலைஞர்களுடன் அமைச்சர் ரோஜா நடனமாடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர். திருப்பதி மகதி கலை அரங்கில் ெஜகன்னா பொன்விழா கலாசார விழா நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 3 நாட்கள் பல்வேறு கலை வடிவங்களுக்காக நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியை துணை முதல்வர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரார்த்தனை பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா பங்கேற்று பேசினார். மேலும் கோலாட்ட கலைஞர்களுடன் கோலாட்டம் ஆடினார். இதனை அனைவரும் ஆர்வமுடன் ரசித்தனர். இந்நிலையில், நேற்று 2வது நாளாக நடந்த பொன்விழா கொண்டாட்டத்திலும் அமைச்ச ரோஜா பங்கேற்று நடன கலைஞர்களுடன் உற்சாகமாக நடனமாடினார். மேலும் சிறப்பாக நடனமாடியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது