ஜூலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம்  வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு  வாரியம் தெரிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணிகளின் நேரடி நியமனத்துக்காக நடந்த போட்டித் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு கடந்த  ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதுகுறித்து ஆட்சேபனைகளை ஏப்ரல் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 29 ஆயிரத்து 141 பேர் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறை தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடப்பதால் பகுதியாக, பாடவாரியாக மட்டுமே பாட வல்லுநர்கள் அழைக்கப்பட்டு விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்து வருகிறோம். இந்த பணி முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். இந்தப் பணி முடிந்ததும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதன்பின் விடைத்தாள்கள் கணினி வழி திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்த பட்சம் 45 நாட்கள் தேவைப்படும். அதற்கு பிறகு சான்று சரிபார்ப்புக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இதனால் மேற்கண்ட பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை இறுதியில் வெளியிடப்படும்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்