ஜிம்பாப்வே பாலோ ஆன்

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 287 ரன்னுக்கு சுருண்ட ஜிம்பாப்வே அணி, பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடுகிறது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிதான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 545 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இப்ராகிம் ஸத்ரன் 72, ஹஷ்மதுல்லா 200*, அஸ்கர் ஆப்கன் 164, ஜமால் 55* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்திருந்தது. பிரின்ஸ் 29, கெவின் 14 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.பிரின்ஸ் 65, கெவின் 41, முஸ்கண்டா 41, சிக்கந்தர் ரஸா 85 ரன் (129 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ரெஜிஸ் சகாப்வா 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 287 ரன் குவித்து ஆல் அவுட்டானது (91.3 ஓவர்). ஆப்கன் பந்துவீச்சில் ரஷித் கான் 4, ஆமிர் ஹம்சா 3, ஷிர்ஸத் 2 விக்கெட் வீழ்த்தினர். 258 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்துள்ளது….

Related posts

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியா

பும்ரா வேகத்தை எதிர்கொண்ட கோஹ்லி

95வது முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் செப்.19ல் தொடக்கம்