ஜாலியாக இணையத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ‘மசாஜ்’ வலைதளத்தில் மனைவி, சகோதரியின் புகைப்படம்: அதிர்ச்சியில் உறைந்து போன இளைஞர்

மும்பை: ‘மசாஜ்’ வலைதளத்தில் தனது மனைவி, சகோதரியின் புகைப்படம் இருப்பதை பார்த்த இளைஞர், போலீசார் உதவியுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கார் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர், ‘மசாஜ்’ சேவை குறித்த இணையதள பக்கங்களை தனது செல்போனில் ஜாலியாக பார்த்து கொண்டிருந்தார். அப்போது மசாஜ் செய்யும் பெண்களின் புகைப்படங்கள் குறிப்பிட்ட வலைதளத்தில் கிடைத்தது. அந்தப் படங்களை பார்த்த போது, தனது மனைவி மற்றும் சகோதரியின் படங்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த இணையதள நிறுவனத்தை ெதாடர்பு கொண்டு, தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்முனையில் பேசிய பெண், கார் நகரில் உள்ள ஓட்டலில் தன்னை சந்திக்குமாறு கூறினார். அதன்படி, அந்த ஓட்டலுக்கு போலீசாருடன் அந்த இளைஞர் சென்றார். பின்னர் இணையதளத்தில் உள்ள தனது சகோதரி, மனைவியின் புகைப்படங்கள் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்டார். அந்தப் பெண் அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல், அங்கிருந்து தப்பிக்க முயன்றார். உஷாரான போலீசார் அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘எஸ்கார்ட் என்ற வலைத்தளத்தின் மூலம் மசாஜ் செய்து கொள்ள விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்காக அழகிய  பெண்களின் புகைப்படங்களை அந்த வலைதளத்தில் பதிவியேற்றி உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், சம்பந்தப்பட்ட இளைஞரின் சகோதரி, மனைவி ஆகியோர் தங்களது அழகான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அவர்களது சொந்த சமூக வலைதள கணக்கில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படங்களை எடுத்து, இந்த எஸ்கார்ட் வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்ட ரேஷ்மா யாதவ் என்ற பெண்ணை கைது ெசய்துள்ளோம். எஸ்கார்ட் மற்றும் மசாஜ் வலைத்தளங்களில் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றும் கும்பலை சேர்ந்தவர் என்பது உறுதிசெய்யப்பட்டது. இவருக்கு பின்னால் இருக்கும் கும்பல் குறித்து விசாரித்து வருகிறோம். சமூக ஊடகங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும்போது, பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்’ என்று கூறினர்….

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை