ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.4.50 கோடி கொரியா சிகரெட்டுகள் பறிமுதல்

கூடலூர்:தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியில் உள்ள வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சோதனைச்சாவடி உள்ளது. நேற்று உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த ஜார்கண்ட் மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உருளைக்கிழங்கு மூட்டைகளுக்கு அடியில் சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கலால் பிரிவுக்கு தகவல் அளித்தனர். நிலம்பூர் கலால் பிரிவு போலீசார் பண்டல்களை சோதனை செய்ததில் 150 மூட்டைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் சிகரெட் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் கொரியாவிலிருந்து கப்பலில் வந்து பின்னர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு கொண்டுவரப்பட்டு லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு வரி செலுத்தாமல் கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது. இவற்றின் மொத்த விலை ரூ.4.50 கோடி என்றும், இவற்றை மத்திய கலால் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாவும் போலீசார் தெரிவித்தனர். லாரியை பறிமுதல் செய்ததோடு டிரைவரான கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ராபர்ட் (30), உதவியாளர் பிரஷீத்(30) ஆகியோரை கைது செய்தனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது