ஜவுளி கடைக்கு அபராதம் விதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பெரிய துணி கடைகளில் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதாக நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நகராட்சியில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள துணி கடைகளில் நகராட்சி ஆணையர் சந்தானம் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது மோதிலால் தெருவில் உள்ள ஜவுளி கடையில் இலவசங்களை அள்ளித் தருவதாக விளம்பரம் செய்ததால் துணி வகைகளை வாங்குவதற்காக அதிக அளவில் கூட்டம் கூடியிருந்தனர். இதனை ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் அந்த கடைக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்து கடைைை உரிமையாளரை எச்சரித்தார். மேலம், விதிமீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அவர்  எச்சரிக்கை விடுத்தார்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு