ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 4 கோடி குழாய் இணைப்புகளை அமைக்க இலக்கு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 4 கோடி குழாய் இணைப்புகளை அமைக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2022 – 23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற பகுதிகளை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள திட்டம், அதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 4 கோடி குழாய் இணைப்புகளை அமைக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த திட்டத்தை மத்திய அரசால் மட்டும் செய்ய இயலாது என்றும் மாநில அரசின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்தார். கிராமப்புற பொருளாதாரத்தின் முன்னேற்றம் பெண்களின் கையிலேயே என்று தெரிவித்த பிரதமர் சுய உதவி குழுக்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். …

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்