ஜம்மு -காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான நிலையில் மக்கள் வீதிகளில் தஞ்சம்..!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலை கத்ராவிலிருந்து 62 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் இன்று காலை 7.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. இதனால் சில இடங்களில் வீடுகள் லேசான அதிர்வு ஏற்பட்டது. உடனடியாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தரையில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதேபோல் கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தேசிய புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. …

Related posts

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு