ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பொதுமக்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர், வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள சோபோர் என்ற மாவட்டத்தில் அரம்போரா பகுதியில் இன்று சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 2 காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னனியில் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பினர்கள் உள்ளதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். சோபோர் நகர மார்க்கெட் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீஸ் கூட்டுப் படை மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரம்போரா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

அவைக் குறிப்பில் இருந்து பேச்சு நீக்கம்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!