ஜம்முவில் பாக். தாக்குதல் இந்திய வீரர் வீர மரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தினமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ முகாம்கள், எல்லையோர கிராமங்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு, இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்தாண்டு முதல் நாளும், புத்தாண்டு தினமுமான நேற்றும், ரஜோரி மாவட்ட எல்லையில் உள்ள நவ்செரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறிய ரக வெடிகுண்டுகளை வீசியும், நவீன துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர் ரவீந்தர் பலத்த காயமடைந்தார். உடனடியாக, அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் வீரமரணம் அடைந்தார்.* ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் 2020ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவம் மொத்தம் 5,100 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.* இது, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் அதிகமானது. சராசரியாக தினமும் 14  தாக்குதல் என்ற நிலையில் இது நடத்தப்பட்டுள்ளது.* இந்த தாக்குதல்களில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 24 வீரர்கள், அதிகாரிகள் உட்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். …

Related posts

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ