ஜன்னல் வழியாக நுழைந்து வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் ஒலித்ததால் 2 பேர் சிக்கினர்

பெரம்பூர்: தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த வங்கியிலிருந்து அலாரம் அடிப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, முன்பக்கம் எந்த பூட்டும் உடைக்கப்படாமல் இருந்தது. பின்புறம் சென்று பார்த்தபோது, வங்கி ஜன்னலை உடைத்து வெளியே உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள், போலீசார் வருவதை அறிந்து தப்பியாடினர்.அவர்களில் ஒருவரை போலீசார் துரத்திப் பிடித்தனர். விசாரணையில், நேபாளத்தை சேர்ந்த சாகர் பகதூர் (30) என்பதும், தனது நண்பருடன் சேர்ந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த தான் பகதூரையும் (40) போலீசார் கைது செய்தனர். நேபாளத்தை சேர்ந்த இவர்கள் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் வங்கியின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே சென்றபோது, ஐதராபாத்தில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் அடித்துள்ளது. இதுபற்றி உடனடியாக வியாசர்பாடி கிளை வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், போலீசார் இவர்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது