ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் : மேலாண் இயக்குனர்

சென்னை: ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என மேலாண் இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார். திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், தைப்பூசம் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மூன்று நாட்களில் மது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அரசு வழங்கிய நெறிமுறைகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது. அச்சமயம் அரசுக்கு ஏற்பட்ட, வருவாய் இழப்பால் மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டது. திறந்த ஒரு சில நாட்களில், இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அண்மையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு வருவாய் அதிகமாக கிடைத்ததாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டுக்கு முன் தினம் மட்டும் தமிழகத்தில் ரூ.159 கோடிக்கு மது விற்பகனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை