சோழீஸ்வரர் சுவாமி கோயிலில் சத்தாபரணம்

மல்லசமுத்திரம், ஜூன் 25: மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராய பெருமாள் சுவாமி, செல்லாண்டியம்மன் கோயிலில், தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனிமூல நட்சத்திர தினமான கடந்த 22ம் தேதி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தர்கள் நான்கு ரத வீதிகளின் வழியாக வடம்பிடித்து இழுத்து வந்து, கோயிலின் முன் நிலை நிறுத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, சத்தாபரண தேர் உற்சவம், சிறப்பு தோரண வாணவேடிக்கை, வசந்த உற்சவம், மஞ்சள் நீராடல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் திருவிழா நிறைவடைந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 3 கோயில்களில் தற்காலிக உண்டியல் திறக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டதில் ₹12,117 வசூலாகியிருந்தது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு