சோழவந்தான் அருகே அபாய சாலை வளைவில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது இரும்பாடி மற்றும் கருப்பட்டி ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்கள் வழியாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அய்யம்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இரும்பாடி மற்றும் கருப்பட்டி ஆகிய இரு பெரிய ஊராட்சிகளுக்குட்பட்ட சாலை ஒரு வாகனம் மட்டும் செல்லுமளவு மிக குறுகலாக உள்ளது.இதன் வழியாகத்தான் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் சிரமத்துடன் சென்று வருகின்றன. இந்த குறுகிய சாலையை விரிவுபடுத்த இப்பகுதி கிராம மக்கள் நீண்ட காலமாக தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். எதிர் வரும் வாகனங்கள் விலகி செல்லக்கூட இடமில்லாத இந்த குறுகிய சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது.இரும்பாடி மயானத்திற்கு இச்சாலையோரமாக மண்சாலை பிரிந்து செல்லுமிடத்தில், அபாய வளைவு உள்ளது. இங்கு தார்சாலையோரம் செல்லும் மண் சாலை பெரிய பள்ளமாக இருப்பதாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் இரும்பாடி பிரிவு முதல் கருப்பட்டி பிரிவு வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த குறுகிய சாலையில், பல அபாய வளைவுகள் உள்ளன. அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும், இவ்விடங்களில் சாலையோரம் ஒளிரும் விளக்குகளுடன் இரும்பு  தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும் இருபுறமும் வாகனங்கள் விலகி செல்லும் வகையில் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்