சோழன் கல்வியியல் கல்லூரியில் மொழிகளின் சங்கமம் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கத்தில் சோழன் கல்வியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் இந்திய மொழிகளின் சங்கமம் விழா நேற்று நடந்தது. உதவி பேராசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின்போது, தேசியமும் தமிழும் என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் தெ.அன்பு பாரதியும் தமிழும் என்ற தலைப்பில் பேசினார். இதைத்தொடர்ந்து பேராசிரியர்கள் தமிழரசி, பாரதிதாசன் கண்ட புதுமைப்பெண் என்ற தலைப்பிலும், ஜோதிகா,  மோனிகா ஆகியோர் சுந்தரத்தெலுங்கு என்ற தலைப்பிலும், யாமினி பக்திமொழி என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர்  யுவராஜ், தேசியம் காத்த தமிழ் என்ற தலைப்பிலும் பேசினர்.  இதில், உதவி பேராசிரியர்  பெருமாள் மற்றும்  பேராசிரியர்கள், பயிற்சி மாணவர்கள் கலந்துகொண்டனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு