சோழந்தூர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரத்தால் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்தூர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடைவதாகவும், சீரான மின்சாரம் வினியோகம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்தூர் கிராமத்தில் சீரான மின்சாரம் வராததால் குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள், கடைகளில் பயன்படுத்தக்கூடிய பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஸ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீர் செய்யவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்திட சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்