சோலார் பேனல்கள் நிறுவ விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், அக்.4: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவ விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி சூர்யா கர் முப்ட் பிஜிலி யோஜனா என்பது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவுதல் மற்றும் இந்தியாவில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக்கொண்ட மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.

இத்திட்டம் பிப்ரவரி 2024 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிப்படியான செயல்முறைகளை pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், https://pmsuryaghar.gov.in என்ற நேரடி இணைப்பை பயன்படுத்தி வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு