சோயா புலாவ்

செய்முறை:  முதலில் ஒரு கிண்ணத்தில் சோயாவை வெந்நீர் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். அடுத்து ஊறவைத்த சோயா, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிய பின்பு இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும். ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் சேர்த்து இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும். அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் & சீரகம் சேர்த்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் நசுக்கிய இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மசாலாவில் ஊறவைத்த சோயா சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில் புதினா இலை, கொத்தமல்லி இலை, ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து  குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். சூடான மற்றும் சுவையான சோயா புலாவ் தயார்….

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி