சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி ரயில்வே போலீசார் நேற்று பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசியை ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் ஆங்காங்கே மறைவான பகுதியில் 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்தல்காரர் குறித்து போலீசார் மறைந்திருந்து கண்காணித்தனர். நேற்று மதியம் ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூர் செல்லும் பாசஞ்சர் ரயிலில் கடத்துவதற்காக அரிசி மூட்டையை எடுக்க வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஜோலார்பேட்டை இடையப்பட்டி பகுதியை சேர்ந்த தேவகுமார் (23) என்பதும் இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக முற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து தேவகுமாரை கைது செய்து திருப்பத்தூர் வாணிப உணவுப்பொருள் கிடங்கு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்….

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை